1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (11:42 IST)

தேர்தல் நாளன்று திடீரென சரிந்த பங்குச்சந்தை.. தேர்தலுக்கு பின் என்ன ஆகும்?

share
இன்று தமிழகம் உள்பட சில மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தேர்தல் நாள் அன்று திடீரென பங்குச்சந்தை 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 260 புள்ளிகள் சார்ந்து 72228 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 89 புள்ளிகள் சரிந்து 21,902 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
தேர்தல் நாளில் பங்குச்சந்தை சரிந்தாலும் தேர்தலுக்குப் பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் பங்குச்சந்தை அதிகரிக்கும் என்றும் எனவே தேர்தல் முடிவு வரும் வரை புதிய முதலீடுகள் அதிகம் செய்யாமல் பங்குச்சந்தையை வெறும் பார்வையாளராக இருந்து பார்க்கும்படி பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva