1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today sensex and nifty status

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று பங்குச்சந்தை சரிவில் முடிந்தது. இந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை சரிவில் தான் வர்த்தகம் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 82,000 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 70 புள்ளிகள் சரிந்து 25,042 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதே நேரத்தில், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!