1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று மீண்டும் சரிந்தது தங்கம்..!

Gold
கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையே நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளதாக தங்க தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னையில் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் சரிந்துள்ள நிலையில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய்   7,115 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து ரூபாய்  56,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,762 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,096 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்: 2 பேர் மீது வழக்குப்பதிவு!