திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 டிசம்பர் 2024 (11:42 IST)

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டம்.. 2 மாதத்திற்குள் பணிகள் முடியுமா?

Chennai  flood
சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாகவும் 2 மாதத்திற்குள் இந்த பணிகள் முடியும் என்றும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது:
 
சென்னையில் நீர்வளத்துறை வசமிருந்த வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு.  6.5 கி.மீ நீளமுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் இருக்கும் குறுகிய பாலங்களால் 1700 கன அடி நீர் செல்ல வேண்டிய இடத்தில் 800 கன அடி மட்டுமே செல்வதால், 12 குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்ட நடவடிக்கை
 
வடபழனி 100 அடி சாலையில் ஒவ்வொரு முறையும் மழையால் தண்ணீர் தேங்குவதற்கு, கால்வாயில் அதிக தண்ணீர் செல்ல முடியாததே காரணமாக இருப்பதால் குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்டப்பட உள்ளன. வரும் 2025 பிப்ரவரி மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும். இதனால் சுமார் 25 லட்சம் மக்கள், மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுக்காக்கப்படுவார்கள் என மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) தகவல்
 
இதேபோல, வேளச்சேரியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு தீர்வாக 2.78 கி.மீ தூரத்திற்கு வீராங்கல் ஓடையின் பக்கவாட்டு சுவரை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஓடையில் தற்போது செல்லும் தண்ணீரை விட 25% தண்ணீர் கூடுதலாக செல்ல வழிவகை செய்யப்படும்
 
 
Edited by Siva