தொடர்புடைய செய்திகள்
- சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!
- ராமதாசுக்கு வேறு வேலை இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
- இன்று ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?
- கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!
- இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?
2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னால் எந்த அளவுக்கு உயர்ந்ததோ அதே அளவுக்கு கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை கடந்த 24ஆம் தேதி 58,400 ரூபாய் என ஒரு சவரன் விற்பனையான நிலையில் இன்று 56,640 ரூபாய் என விற்பனையாகி வருவதை அடுத்து கிட்டத்தட்ட 2000 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து ரூபாய் 7,080 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 960 குறைந்து ரூபாய் 56,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,585 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,680 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
