தொடர்புடைய செய்திகள்
- சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!
- இரவு முதல் அதிகாலை வரை மழை.. குளிர்ந்தது சென்னை..!
- தொழிலதிபர் மனைவியிடம் ரூ.10 கோடி பறித்த சென்னை நபர்கள்.. அதிர்ச்சி தகவல்..!
- சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை கனமழை வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!
- சென்னையில் மட்டும் 70 பெட்ரோல் பங்க் மூடல்; அதிர்ச்சி காரணம்..!
ஒரே நாளில் 1300 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 1300 ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமத்தை 165 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1320 ரூபாயும் குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ரூபாய் 7,200 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 1320 குறைந்து ரூபாய் 57,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7705 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 102.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 102,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
