வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2024 (09:48 IST)

குளத்தில் மலர்ந்த தாமரைக்கே அலறுகிறீர்களே.. ஒவ்வொரு வீட்டிலும் மலரும்! - சேகர்பாபுவுக்கு தமிழிசை பதிலடி!

Tamilisai

சமீபத்தில் ‘குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது’ என அமைச்சர் சேகர்பாபு கிண்டலாக பேசியதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதில் அளித்து பேசியுள்ளார்.

 

 

சென்னை போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் ஈரநிலை பசுமை பூங்கா பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் சென்றிருந்தார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் அங்கிருந்த குளத்தில் தாமரை மலர்கள் மலர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி, குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது, அதை அகற்றுங்கள் என கிண்டலாக பேசியுள்ளார்.

 

அமைச்சர் சேகர்பாபு கிண்டலாக பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவரது பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.
 

 

அதில் அவர் “குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே.. வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது. அதை கண்டு அலறப்போகிறீர்கள். அரசு பூங்காவில் கூட தாமரை இருக்க கூடாது என நினைக்கும் நீங்கள், தாமரையே அரசமைப்பதை காண்பீர்கள்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K