1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரன் விலை ரூ.52000ஐ நெருங்கியது..!

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்துள்ளது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,470 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 51,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,925 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 87.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  87,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம்