1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

இன்று ஒரே நாளில் ரூ.720 உயர்ந்தது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

சென்னை
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 90 ரூபாயும் ஒரு சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,920 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 720 உயர்ந்து ரூபாய் 55,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,390 எனவும் ஒரு சவரன் ரூபாய் 59,120 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,500.00  எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ட்ரம்ப்பை சுட்ட துப்பாக்கி மாடல்.. அமெரிக்கா முழுவதும் தடை செய்யும் ஜோ பைடன்!