1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

மீண்டும் உயர்கிறது தங்கம் விலை.. முதலீடு செய்ய சரியான நேரமா?

சென்னை
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,705 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 440 உயர்ந்து ரூபாய் 53,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,175 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 95.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 95,600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.. கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் குறித்து ஈபிஎஸ்..!