வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , சனி, 1 ஜூன் 2024 (14:56 IST)

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 27,34,774 ரூபாய் ரொக்கமும்,164 கிராம் தங்கமும், 2கிலோ 250 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது!

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
 
இதில், ரூபாய் 27லட்சத்து 34 ஆயிரத்து 774 ரூபாய் ரொக்கமாகவும், 164 கிராம் தங்கமும், 2 கிலோ 250 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.
 
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில், சித்திரை மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது.
 
அதில்,பணம் ரூ.27 லட்சத்து, 34 ஆயிரத்து 774 ரூபாய், தங்கம் 164 கிராம், வெள்ளி 2 கிலோ 250 கிராம் இருந்தது.
 
இதில், திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள்,  திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.