தொடர்புடைய செய்திகள்
- சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இண்டர்போல் உதவியை நாட காவல்துறை முடிவு!
- செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிரம்!
- ''மியூசிக் கற்றுக் கொடுத்தது என் அக்காதான்''- யுவன்சங்கர் ராஜா உருக்கம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி வெளியீடு
இன்றைய தங்கம், வெள்ளி விலையில் என்ன மாற்றம்.. சென்னை நிலவரம் இதோ:
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெள்ளை விலை ஒரு கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 5840.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 46720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6310.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50480.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 76.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
