1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (19:45 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி வெளியீடு

chennai super kings
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஸ்பான்சர் இணைந்துள்ள நிலையில், அந்த அணியின் புதிய ஜெர்ஸி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, டெல்லி கேப்பிடல்ஸ்,  கொல்கட்டா நைட்ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடக்கவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஸ்பான்சராக Etihad Airways இணைந்துள்ளது. எனவே சென்னை அணியின் புதிய ஜெர்சி இன்று வெளியிட்டுள்ளது.