1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

2வது நாளாக சரிந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு குறைந்ததா?

Gold
கடந்த சில நாட்களாக  தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 5715.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து  ரூபாய் 45720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6185.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49480.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 78.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!