தொடர்புடைய செய்திகள்
- இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- வீட்டு உபயோக சிலிண்டர்.. இன்று முதல் விலை குறைப்பு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!
- சென்னையின் பிரபலக் கல்லூரியில் இன்று ஜவான் திரைப்பட ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி!
- யாருடைய தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறது? சீமான் கேள்வி..!
- செப்டம்பர் 1 வரை கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.240 உயர்வு..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5530.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 44240.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6000.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48000.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 80.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
