1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (16:35 IST)

யாருடைய தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறது? சீமான் கேள்வி..!

தனிநபர் ஆண்டு வருமானம் நடப்பாண்டில் தமிழகத்தில் ரூ.1.66 லட்சமாகவும், இந்திய அளவில் ரூ.98,374 ஆகவும் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பிற பகுதிகளை விட தமிழகத்தில் விலைவாசி குறைவாக உள்ளது என்றும், கொரோனா காலத்திற்கு பிறகு தமிழகத்தில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
 இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் யாருடைய தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். 
 
மேலும் என்னிடம் வாடகை கட்டவே பணம் இல்லை என்றும் அவர் கூறினார். ஒருவேளை  அமைச்சரின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran