1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

சென்னை
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று ஒரு கிராமு தங்கம் விலை 5 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் விலை 40 ரூபாயும் உயர்ந்துள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5500.00 என்றும் ஒரு சவரன் தங்கம் 44000.00 என்று விற்பனை ஆகி வருகிறது. 
 
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ. 5970.00 என்றும், 8 கிராம் ரூ. 47760.00 என்றும் சென்னையில் விற்பனையாகி வருகிறது.
 
அதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.81000 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்