1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Updated : சனி, 15 ஏப்ரல் 2023 (10:19 IST)

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூபாய் 5650.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 குறைந்து ரூபாய் 45200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6114.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48912.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 150 காசுகள் குறைந்து ரூபாய் 81.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Mahendran