ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (16:34 IST)

புதிய உச்சத்தை தொட்ட பங்கு சந்தை..! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!

sensex
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண், வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது
 
இந்த வாரத்தில் பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று திடீரென  சென்செக்ஸ் 999.78 புள்ளிகள் உயர்ந்து 72,720.96 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 281.05 புள்ளிகள் இருந்து 21.928.25 புள்ளிகளில் வர்த்தகமானது.
 
இதனால் சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.  டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் 4.3 சதவீதமும், இன்ஃபோசிஸ் 7 சதவீதமும் உயர்ந்தன. இந்த உயர்வு தகவல் தொழில்நுட்ப குறியீட்டை 5 சதவீதம் அதிகமாக உயர்த்தியுள்ளது. 
 
ALSO READ: சரக்குனா பாண்டிச்சேரி தான்! அதுக்காக இப்படியா? தனுஷ் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம்.!!
அதுமட்டுமின்றி இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ மற்றும் எச்சிஎல்டெக் ஆகியவை நிஃப்டி 50 குறியீட்டில் 3% முதல் 7% வரை உயர்ந்து லாபம் பெற்றுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.