1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (16:36 IST)

சரக்குனா பாண்டிச்சேரி தான்! அதுக்காக இப்படியா? தனுஷ் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம்.!!

dhanush
நடிகர் தனுஷ் நடித்து வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் புதுச்சேரியில் அவரது ரசிகர்கள்  பொதுமக்களுக்கு கரும்பு வழங்கி கட்டவுட்டுக்கு பால், பீர் அபிஷேகம் செய்து கொண்டாடினர்.
 
பொங்கல் பண்டிகையொட்டி நடிகர் தனுஷ் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 

ALSO READ: ஏன் இத்தனை மூத்த வழக்கறிஞர்கள்?..! பொன்முடி வழக்கில் நீதிபதி கேள்வி..!!
இந்நிலையில் நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியானது இதனை ஒட்டி புதுவை மாநில நடிகர் தனுஷ் தலைமை ரசிகர் மன்றம் சார்பாக திரையரங்கம் எதிரே பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டு அதற்கு ரசிகர்கள் பால், பீர் அபிஷேகம் செய்து பூ தூவி பூசணிக்காய், 108 தேங்காய் உடைத்து கொண்டாடினர்.

fans dance
பொங்கல் பண்டிகையொட்டி சாலையில் சென்ற மக்களுக்கு  ரசிகர்கள் கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பெண் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டது  அப்பகுதியில் இருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பிரமிப்பை ஏற்படுத்தியது