செவ்வாய், 18 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 பிப்ரவரி 2025 (11:35 IST)

தங்கம் விலை திடீரென ரூ.800 குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 100 ரூபாயும் ஒரு சவரனுக்கு 800 ரூபாயும் குறைந்துள்ளதை அடுத்து நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,990 என விற்பனையான நிலையில் இன்று ரூ.100 குறைந்து 7,890 என விற்பனையாகிறது. அதேபோல் நேற்று ஒரு சவரன் தங்கம் ₹63,920 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று ₹800 குறைந்து ₹63,120என விற்பனையாகியுள்ளது.
 
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ₹8607 என்றும், எட்டு கிராம் ₹68,856என்றும் விற்பனையாகி வருகிறது.
 
நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹108 என விற்பனையான நிலையில், இன்று அதே விலையிலும் ஒரு கிலோ வெள்ளி ₹108,000 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
 
தங்கம் விலை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த நேரத்தில் முதலீட்டுக்கு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran