1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Rises Again Today: Increased by ₹200 in Chennai in a Single Day

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.64,000ஐ நெருங்கியதா?

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு சவரன் 64 ஆயிரத்தை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் 35 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 280 ரூபாயும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் , வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 35 ரூபாய் உயர்ந்து    7,980 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 280 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   63,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,705 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
விண்ணை பிளக்கும் ‘அரோகரா’ கோஷம்; பழனியில் கட்டண தரிசனம் ரத்து! - குவியும் பக்தர்கள்!