1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Takes a Hit: Sensex Drops 400 Points, Nifty Also Down

நேற்று ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளில் ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று திடீரென சரிந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 400 புள்ளிகள் சரிந்து 84,879 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 104 புள்ளிகள் சரிந்து 25,861 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா வங்கி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டி.சி.எஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஓராண்டுக்கு இலவச Subscription.. பயனர்களை அதிகரிக்க ChatGPT எடுத்த அதிரடி முடிவு..!