1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Shock: Indices Decline Despite Monday's Rise

2வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

பங்குசந்தை
இந்த வாரத்தில் திங்கட்கிழமை மட்டுமே பங்கு சந்தை உயர்ந்த நிலையில், நேற்றும், இன்றும் பங்குச் சந்தை சரிவில் வர்த்தகம் ஆகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், சரிவில் தான் வர்த்தகமாகி வருகிறது என்பதும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 232 புள்ளிகள் சரிந்து, 81,323 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிப்டி 70 புள்ளிகள் சரிந்து, 24,750 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் அதானி, போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி லைஃப், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஜியோ பைனான்ஸ், ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதே நேரத்தில், டைட்டான், டெக் மகேந்திரா, டி.சி.எஸ்., டாடா ஸ்டீல், சன் பார்மா, கோடக் மகேந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், HCL டெக்னாலஜி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தண்டனை குறைச்சிக் குடுங்க ப்ளீஸ்! கோர்ட்டில் கதறி அழுத ஞானசேகரன்! - நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை என்ன?