தொடர்புடைய செய்திகள்
- எதிர்பார்த்தது போலவே தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றும் 400 ரூபாய் சரிவு..!
- நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு.. என்னென்ன பங்குகள் லாபம்..!
- பெரும் சரிவுக்கு பின் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை நிலவரம்..!
- நேற்று 2800 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ் இன்று திடீர் சரிவு.. நிப்டி நிலவரம்..!
- இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல, பாகிஸ்தான் பங்குச்சந்தையும் ஏற்றம்..!
பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. லாபத்தை அதிகளவில் புக் செய்கிறார்களா?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் உயர்ந்ததால், அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் உச்சத்தை அடைந்தது. இதனை அடுத்து, லாபத்தை புக் செய்ய முதலீட்டாளர்கள் தொடங்கியதால், நேற்று மற்றும் நேற்று முன்தினம் பங்குச்சந்தை சரிந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து, 80,923 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 119 புள்ளிகள் சரிந்து, 24,459 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில், பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
டைட்டான், டிசிஎஸ், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva
