1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Declines Again Today: Latest Sensex and Nifty Updates

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குசந்தை
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று லேசான சரிவு  இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிவுடன் தான் வர்த்தகம் தொடங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்து 81005 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 112 புள்ளிகள் சரிந்து 24,605 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல் டைட்டான், டிசிஎஸ், டாட்டா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் வங்கி, மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!