1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. share market sensex and nifty status

மீண்டும் வீழ்ச்சி அடைந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக இஸ்ரேல் போர் காரணமாக பங்கு சந்தை எந்த நேரமும் அதிக வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை தொடக்கத்திலேயே வீழ்ச்சி அடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 120 புள்ளிகள் குறைந்து 66351 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தையான நிப்டி இன்றைய  32 புள்ளிகள் குறைந்து 19,709 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
இன்று ஜொமைட்டோ, நிப்பான்  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும்  டிசிஎஸ், சிட்டி யூனியன் வங்கி  உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் 300 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை.. போர் காரணமா?