500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பங்குச்சந்தை திடீரென சரிந்தது என்பதை பார்த்தோம்.
நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் என்பதால் பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இன்று மீண்டும் காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சுமார் 500 புள்ளிகளுக்குக்ம் மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தியின் 575 புள்ளிகள் சார்ந்து 67022 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 165 புள்ளிகள் சரிந்து 19968 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக இருக்கிறது.
பங்குச்சந்தை இந்த வாரம் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Edited by Siva