1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Share market sensex and nifty status

4வது நாளாக சென்செக்ஸ் ஏற்றம்.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

மும்பை பங்குச்சந்தை மீண்டும் புதிய உச்சம் தொட்டு சாதனை
இந்திய பங்குச்சந்தை கடந்த 3 நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று 4வது நாளாகவும் பாசிட்டிவாக தொடங்கி உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்த வாரம் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய 3 நாட்களுமே பெரிய அளவில் பங்குச்சந்தை உயரவில்லை என்றாலும் ஓரளவுக்கு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
இந்த நிலையில் சற்று முன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் இன்றும் ஏற்றமே அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சற்று முன் 24 புள்ளிகள் உயர்ந்து 60410 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 17822 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. தொடர்ச்சியாக 4 நாட்கள் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இந்த ஆண்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..!