1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Share market nifty and sensex status

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை நிலவரம் எப்படி? சென்செக்ஸ், நிப்டி ஏற்றமா?

பங்குச்சந்தை
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளிலேயே ஏற்றம் அடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பங்கு சந்தை இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 65 புள்ளிகள் உயர்ந்து 59,195 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச் சந்தை 35 புள்ளிகள் உயர்ந்து 17,635 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva