சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி!
இந்திய சந்தைகளில் பங்கு விலைகள் மாலை மீண்டும் குறைந்ததால் சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சியடைந்தது.
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ஆனால் நேற்று சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 50 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனை அடுத்து காலையில் 57,104 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 17,187 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய சந்தைகளில் பங்கு விலைகள் மாலை மீண்டும் குறைந்ததால் சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 704 புள்ளிகள் சரிந்து 56,463 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவன பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 215 புள்ளிகள் சரிந்து 16,958 புள்ளிகளுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றது.