1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (12:50 IST)

3வது நாளாக தொடர்ந்து சரிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் அதிரடியாக சரிவு

Share Market
இந்த வாரத்தின் முதல் இரண்டு நாள் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சரிந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச் சந்தை சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 170 புள்ளிகள் சரிந்து 58400 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 45 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 490 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பங்குச்சந்தை மீண்டும் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றாலும் இனி வரும் காலங்களில் பங்குச்சந்தை மீண்டும் எழுச்சி பெறலாம் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்