இன்றைய பெட்ரோல் & டீசல் விலை விவரம் (06/11/2022)
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் காரணமாக பெட்ரோல் விலை நேற்று ஐந்து ரூபாய் குறைந்தது என்பதும் டீசல் விலை 1 ரூபாய் குறைந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக இன்று சென்னையில் பெட்ரோல் விலை 101.40 ரூபாய் என்ற விலைக்கும் டீசல் விலை ரூபாய் 91.43 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.