ரிலையன்ஸெல்லாம் பின்னாடி போ; முதலிடத்தை பிடித்த டாடா!

tata
Prasanth Karthick| Last Modified புதன், 11 மார்ச் 2020 (14:14 IST)
இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவால் ரிலையன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ள டாடா.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தொழில்கள் சுணக்கம் கண்டுள்ளன. இதனால் உலகளவில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் பங்கு சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்திய அளவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் 12.35 சதவீதம் அளவுக்கு சரிந்து 6.88 லட்சம் கோடி முதலீட்டுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேசமயம் 7.40 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு இரண்டாம் இடத்தில் இருந்த டாடா கன்சல்டன்சி நிறுவனம் சரிவை சந்தித்து 7.06 லட்சம் கோடியாக உள்ளது.

இரண்டு நிறுவனங்களுமே சரிவை சந்தித்திருந்தாலும் டாடாவை விட ரிலையன்ஸ் அதிக சதவீதத்தில் சரிவை சந்தித்துள்ளதால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :