செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (17:53 IST)

ஆப்பு வைக்க ரெடியான ஜியோ; விலை உயரும் டேட்டா!!

டேட்டா கட்டணத்தை உயர்ந்த ரிலையன்ஸ் ஜியோ, டிராய்-யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. 
 
2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் பலர் ஜியோவிற்கு தாவினர். இதனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன.  
 
அதன் பின்பு ஜியோவுக்கு நிகரான திட்டங்களை அமல்படுத்தி, தனது வாடிக்கையாளர்களை ஓரளவு திருப்திப்படுத்தியது. இந்நிலையில் நஷ்டத்தில் தொடர்ந்து இயங்கி வருவதாக கூறி வந்த ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தின.
 
இதனைத்தொடர்ந்து ஜியோவும் கட்டணத்தை உயர்த்தியதோடு, மற்ற நிறுவன எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ளும் போது 6 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது  IUC கட்டணம் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், ஒரு ஜிபி டேட்டா கட்டணத்தை ரூ.20 அதிகரிக்க வேண்டுமென்று  டிராய் அமைப்பிடம் ஜியோ கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதாவது, அடுத்த 6 முதல் 9 மாதங்களில் 2 முதல் 3 முறையாக கட்டணத்தை ரூ.20 அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.