ஒன்னும் அவசரமில்லை பொறுமையா வாங்கிக்கலாம்... கிடு கிடுன்னு ஏறும் தங்கம் விலை!

papiksha| Last Modified சனி, 28 மார்ச் 2020 (13:08 IST)

சென்னையில் தங்கம் விலை
இன்று ஒரே நாளில் சவரனுக்கு 264 ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னை சந்தை நிலவரப்படி இன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,201 க்கும், சவரனுக்கு ரூ.264 அதிகரித்து 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.33,344லிருந்து ரூ.33,608 ஆக அதிகரித்துள்ளது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,399 ரூபாயாக உள்ளது. மேலும் 8 கிராம் தூய தங்கத்தின் விலை 34,928 ரூபாயிலிருந்து இன்று 35,192 ரூபாயாக அதிகரித்து தொடர்ந்து நான்காவது நாளாக விலையேற்றம் நீடிக்கிறது..

அதே போல் வெள்ளியின் விலையில் இன்றும் எந்த ஒரு மாற்றமும் இன்றி 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.41.70 ஆகவே இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 41,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவில் தங்கம் விலை உயர்ந்துள்ளதை கண்டு எப்படியும் வெளியில் செல்ல முடியாது என்பதால் உயர்ந்தால் என்ன குறைந்தால் என்ன என்று மக்கள் எந்த ஒரு ரியாக்ஷ்னும் காட்டாமல் இருந்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :