அதிசயம் ஆனால் உண்மை: குறைந்தது தங்கத்தின் விலை!!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
நேற்று நிலவரத்தின் படி சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.46 உயர்ந்து ரூ.5,420க்கு விற்பனைக்கு ஆனது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ.43,360க்கு விற்பனை ஆனது. .
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.5,380க்கு விற்பனை.