1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Prices Soar: A New Record High for a Sovereign

84,000 ரூபாயை தொட்டுவிட்டது தங்கம்.. விரைவில் ஒரு லட்சம் தான் டார்கெட்டா?

தங்கம்
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து, முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000 என்ற மைல்கல்லை எட்டிய நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
 
செப்டம்பர் 23 ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 அதிகரித்து, ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.84,000 என்ற புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இது, வரும் நாட்களில் தங்கம் ஒரு இலட்சத்தை எட்டலாம் என்ற எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
 
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்துள்ளது.இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்து பார்ப்போம்,
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,430
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,500
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 83,440
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 84,000
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,378
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,454
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 91,024
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  91,632
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 149.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 149,000. 00
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
H1B விசா கட்டண உயர்வு.. திடீரென இறங்கி வந்த அமெரிக்கா.. விலக்கு அளிக்க முடிவு..!