செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 செப்டம்பர் 2025 (10:19 IST)

ரூ.83,000ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் உயர்வு..!

ரூ.83,000ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் உயர்வு..!
கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை, இன்றும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்துள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வால், ஒரு சவரன் தங்கம் ரூ.560 அதிகரித்து, ரூ.83,000ஐ நெருங்கியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
தங்கத்தை போலவே, வெள்ளியின் விலையும் இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 அதிகரித்து, வரலாறு காணாத அளவுக்கு விலையேற்றம் கண்டுள்ளது. 
 
இந்த நிலையில்  சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,290
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,360
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 82,320
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,880
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,225
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,302
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 89,800
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  90,416
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 148.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 148,000. 00
 
 
Edited by Siva