தங்கம் விலையில் திடீர் சரிவு – பவுனுக்கு 128 ரூபாய் வீழ்ச்சி !

Last Updated: சனி, 16 மார்ச் 2019 (09:00 IST)
நீண்ட நாட்களாக உயர்ந்துகொண்டே வந்த தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 128 ரூபாய் குறைந்துள்ளது.

இந்தியா, தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்து அதை நகை மற்றும் இன்னப் பிற உப்யோகப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக தங்க நாணயங்கள், வெள்ளி நகை மற்றும் பதக்கங்கள் ஏற்றுமதியில் கடுமையானப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து தங்கம் விலை உயர்விற்குக் காரணமாக சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்றம் அதிகமாக இருக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் ஏழை மற்றும் எளிய மக்கள் தங்கம் வாங்க முடியாமல் இருந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இந்தியாவில் தங்கத்தின் விலை பவுனுக்கு 128 ரூபாய் குறைந்தது.  இதனால் நேற்றைய தங்கத்தின் விலை 24 ஆயிரத்து 448-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.3056-க்கு விற்பனை செய்யப்பட்டது.இதில் மேலும் படிக்கவும் :