உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற ’தங்க மங்கை’...
டெல்லியில் நடைபெற்ற உலக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்று நாட்டின் தங்க மங்கையாகியிருக்கிறார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.
இதனையடுத்து வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனைகள் வென்றனர். துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ள சந்தேலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.