புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (11:37 IST)

நகை ஏற்றுமதி வீழ்ச்சி – வணிகர்கள் வருத்தம் !

இந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 8.5 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்தியா, தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்து அதை நகை மற்றும் இன்னப் பிற உப்யோகப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக தங்க நாணயங்கள், வெள்ளி நகை மற்றும் பதக்கங்கள் ஏற்றுமதியில் கடுமையானப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னடைவால் இன்னபிற நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதியிலும் வீழ்ச்சி அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவரங்களை நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது. கடந்த ஏபரல் முதல் டிசம்பர் வரையிலான 8 மாதங்களில் மொத்தம் 22.41 பில்லியன் டாலர் மதிப்பிலான நகை மற்றும் ரத்தினங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2017 ஆம் ஆண்டை விட 8.5 சதவீதம் குறைவாகும். கடந்த 2017 ஆம் ஆண்டில் நகை ஏற்றுமதி 24.5 பில்லியன் டாலர்களாக இருந்தது.