1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold price increases in Chennai

ப்ரேக் இல்லாமல் ஏறிக்கொண்டே போகும் தங்கத்தின் விலை!!

தமிழகம்
தீபாவளிக்கு பிறகு குறைய துவங்கி வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளது.  
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளது. 
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 37,248-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.2 உயர்ந்து ரூ. 4,652-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
பின்வாங்கப்படுமா வேளாண் சட்டம்? மோடி அவசர ஆலோசனை!