1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold price in Chennai is Rs 41,000 unexpectedly

வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை ரூ.41,000 !!!

தங்கம் விலை
நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் தங்கம் விலை தற்போது 41 ஆயிரத்தை தொட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.40,824 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.28 அதிகரித்து ரூ.5,103 ஆக விற்பனையாகி வந்தது. 
 
ஆனால் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.41,000க்கு விற்பனை ஆகிறது. வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
10ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் சிலை! – மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு!