மேலும் ஒரு மாத ஊரடங்கு: கொரோனாவை வெல்லுமா சென்னை??

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 31 ஜூலை 2020 (10:04 IST)
சென்னையில் உள்ள 9 மண்டலங்களில் ஆயிரத்திற்கு குறைவானவர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
நேற்று தமிழகத்தில் 5,864 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5,864 பேர்களில் 1,175 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98,767 ஆக உயர்ந்துள்ளது. 
 
ஆனால், சென்னையில் உள்ள 9 மண்டலங்களில் ஆயிரத்திற்கு குறைவானவர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டையில் 602 பேர், ராயபுரத்தில் 806 பேர், திருவிக நகரில் 1,137 பேர், அம்பத்தூரில் 1198 பேர், அண்ணா நகரில் 1,453 பேர், தேனாம்பேட்டையில் 1,013 பேர், கோடம்பாக்கத்தில் 1734 பேர், வளசரவாக்கத்தில் 937 பேர், அடையாறு மண்டலத்தில் 1,194 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரே மாதத்தில் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :