செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 நவம்பர் 2025 (09:36 IST)

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இந்த வாரத்தில் தங்கம் விலை உச்சத்துக்கு சென்றது என்பதைப் பார்த்தோம்.
 
இந்த நிலையில், தங்கம் விலை நேற்றைய விலையை விட இன்று ஒரு கிராமுக்கு 30 ரூபாய் மட்டும் குறைந்து விற்பனையாகி வருகிறது. அதே போல், ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளியின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு நான்கு ரூபாயும், ஒரு கிலோவுக்கு நான்காயிரம் ரூபாயும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை  பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,800
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,770
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 94,400
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 94,160
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,873
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,840
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 102,984
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  102,720
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 180.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 180,000.00
 
Edited by Siva