வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 26 நவம்பர் 2025 (09:55 IST)

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென உயர்ந்தது. இன்று  இரண்டாம் நாளாகவும் விலை உயர்ந்து, தொடர் ஏற்றத்தில் இருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 ரூபாயும், ஒரு சவரனுக்கு ரூ.640 ரூபாயும் உயர்ந்துள்ளது.
 
தங்கத்தைப் போலவே, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2000 அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை இங்கே விரிவாகக் காணலாம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,720
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,800
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 93,760
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 94,400
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,785
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,873
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 102,280
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  102,984
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 176.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 176,000.00
 
Edited by Siva