1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and silver rate in Chennai decreases

குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளி விலை!

gold
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையாகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.4,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து ரூ.70.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash