புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (15:33 IST)

இந்த வெயிலிலும் மழையா? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி இருந்தாலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 28ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.