1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and Silver Prices Crash Amid Global Tensions: Why the Safe Haven is Sliding

போர் வந்தால் தங்கம் உயரும் தானே? பின்னர் ஏன் பயங்கரமாக குறைகிறது? இதுதான் காரணம்..!

தங்கம் விலை சரிவு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்று காலை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டு முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
பொதுவாக போர் காலங்களில் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் பயங்கரமாக விலை உயரும். ஆனால் தற்போது 9% வரை சரிந்து சவரனுக்கு பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
 
மேலும், பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று பணமாக்கி வருவதும் விலைச் சரிவுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த வாரம் மட்டும் தங்கம் 10% க்கும் அதிகமான மதிப்பை இழந்துள்ளது. இது தற்காலிக விலை திருத்தம் மட்டுமே என்றும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் மீண்டும் உயரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 
 
எனவே, இந்த சூழலில் முதலீட்டாளர்கள் பதற்றமடைந்து விற்பனை செய்யாமல், பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கேப்டன் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்கக் கூட தகுதியில்லையா? கார் விவகாரத்தில் எழுந்த அவதூறுக்கு பிரேமலதா கேள்வி!